சென்னை மற்றும் கோவை பிரிவுகளை சேர்ந்த அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், ஈரோட்டில் நடத்திய அதிரடி சோதனையில், போலியாக தயாரிக்கப்பட்ட 'பாஸ்ட்டிராக் பேக்'களை பறிமுதல் செய்தனர். தமிழகத்தின் பல்ே வறு பகுதிகளில், பிரபல 'பாஸ்ட் டிராக்' நிறுவனத்தின் பைகள், தள்ளுவண்டிபைகள் விற்பனைசெய்யப்படுவதாக, சென்னை மற்றும் கோவையில் உள்ள, அமலாக்கப்பிரிவு மற்றும் அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவினருக்கு,அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், ஈரோட்டில், அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில், ஈரோட்டு மாசித்தில் உள்ள புதிய சக்ரா பைகள் கடையில் இருந்து, போலியாக தயாரிக்கப்பட்ட, பாஸ்ட் டிராக் பேக்'கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக, ஷாஜகான் சாகுல் அமீது (39) என்பவர் கைது செய்யப்பட்டார்.
போலி பைகள் பறிமுதல்