கோட்சே தேச பக்தர்' என்ற பிரக்யா தாகூரின் பேச்சு அவைக் குறிப்பில் நீக்கம்!!

மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை தேச பக்தர் என்று பாஜக எம்.பி. பிரக்யா தாகூர் மக்களவையில் குறிப்பிட்டார். இந்த வார்த்தை அவைக் குறிப்பில் இருந்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நீக்கியுள்ளார்.



மக்களவையில் நேற்று பாதுகாப்பு மசோதா குறித்து திமுக எம்.பி. அ. ராசா பேசிக் கொண்டு இருந்தார். அப்போது, மகாத்மா காந்தியை கோட்சே ஏன் கொன்றார் என்பது குறித்து ராசா விளக்கம் அளித்துக் கொண்டு இருந்தார். ''32 ஆண்டுகளாக காந்தி மீது வெறுப்புணர்வுடன் இருந்ததாகவும், அதனால்தான் அவரைக் கொன்றதாகவும் கோட்சேவே கூறியுள்ளார். குறிப்பிட்ட கொள்கையில் கோட்சே நம்பிக்கை கொண்டவர்'' என்று ராசா பேசி இருந்தார்.


நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர்


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உடனடியாக குறுக்கிட்ட பாஜக எம்.பி. பிரக்யா, ''நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர்'' என்று குரல் எழுப்பினார். இதற்கு அவையில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அவையில் மட்டுமில்லை, நாடு முழுவதும் பிரக்யாவுக்கும், பாஜகவுக்கும் எதிராக கருத்துக்கள் எழுந்தன.