நகரம் முதல் கிராமம் வரை கற்றாத கல்வியை கற்றுத்தரும் இணையம்!

நம் வாழ்க்கைக்குள் கலந்துள்ள இணையத்தின் பாரிய தாக்கமானது சில பரபரப்பான வேலைகளையும் செய்து வருகிறது.


அதிலொன்று தான் மாணவர்களுக்கான கற்றல் புரட்சி மற்றும் தேவையான அறிவிற்கான உடனடி அணுகல் - சுவாரசியம் என்னவென்றால் இவை அனைத்துமே ஒரு சில கிளிக்குகளில் சாத்தியமாகிறது!


இணையத்தால் முடியாததென்று ஒன்று கிடையவே கிடையாது. மக்களுடன் இணைவது, தகவல்களை அணுகுவது தொடங்கி நாம் சற்று இளைப்பாறுவது வரை எல்லாமே இணையத்தில் சாத்தியம் தான்! இப்படியாகிய இணையத்தை ஒரு அதிசயம் என்றே கூறலாம். இப்படியாக நம் வாழ்க்கைக்குள் கலந்துள்ள இணையத்தின் பாரிய தாக்கமானது சில பரபரப்பான வேலைகளையும் செய்து வருகிறது.


அதிலொன்று தான் மாணவர்களுக்கான கற்றல் புரட்சி மற்றும் தேவையான அறிவிற்கான உடனடி அணுகல் - சுவாரசியம் என்னவென்றால் இவை அனைத்துமே ஒரு சில கிளிக்குகளில் சாத்தியமாகிறது! குறிப்பாக காலாவதியான கல்வி முறைகளை கையாளும் சிறிய கிராமங்கள் மற்றும் நகரங்களில்! இம்மாதிரியான இடங்களில் இணையம் என்பது மாணவர்களுக்கான "தகவல் உலகத்தைத்" திறந்துள்ளது.