ராணுவ மையத்தில் உள்ள ஒரு கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளோம்

ராணுவ மையத்தில் உள்ள ஒரு கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளோம். இங்கு, மொத்தம், 350 பேர் தங்கியுள்ளனர். மொத்தம், 15, 'பராக்' எனப்படும் பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பராக்கிலும், 18 பேர் உள்ளோம். ஒரு பராக்கில் உள்ளவர்கள், மற்ற பாரக்கில் உள்ளவர்களுடன் பேசவோ, பழகவோ முடியாது. முற்றிலும், குளிரூட்டப்பட்ட பராக்கில், ஒவ்வொருக்கும், தனி படுக்கை, போர்வை, பொருட்கள் வைக்க அலமாரி வழங்கப்பட்டுள்ளது. செல்போனில் பேசிக் கொள்ள அனுமதிக்கின்றனர். உடல் நல பாதிப்பு இருந்தால், கவனிப்பதற்கென, தனி மருத்துவக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இங்கு தங்குவோருக்கு, சைவ உணவுகள் மட்டுமே வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பிரிவுக்கும், தனி தனி நேரத்தில் உணவுகள் பரிமாறப்படுகிறது. ஒரு பிரிவில் உள்ளவர்கள், உணவு அளிக்கப்படும் இடத்துக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.